பிரபல நடிகருக்கு பெண் குழந்தை... வைரலாகும் இன்ஸ்டா.!
Mar 7, 2024, 15:58 IST
தமிழ் திரையுலகில் “எங்கேயும் எப்போதும்” படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஷர்வானந்த். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
டோலிவுட் திரையுலகில் பிசியான இளம் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் ஷர்வானந்த். இவருக்கு 2023 ஜூனில் திருமணம் நடைபெற்றது. ரக்ஷிதா ரெட்டிக்கும் சர்வானந்த்துக்கும் திருமணம் வெகுவிமரிசையாக ஜெய்ப்பூரில் உள்ள லீலா அரண்மனையில் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் ராம்சரண் உட்பட பல முண்ணனி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளில் நடிகர் ஷர்வானந்த் பெண்குழந்தை பிறந்த செய்தியை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்ச் அளித்துள்ளார். தங்களின் செல்ல தேவதைக்கு லீலா தேவி மைனி என பெயரிட்டுள்ளார். ரசிகர்கள் ஷர்வானந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில், இவர் நடிக்கும் ‘மனமே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!