undefined

பிரபல நடிகை  காலமானார்... சோகத்தில் திரையுலகம்!!

 

பழம்பெரும் மூத்த நடிகை பைரவி. பைரவி  வைத்யா காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 6  மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.  தொடர் சிகிச்சை எடுத்து வந்த நடிகை  சிகிச்சை பலனின்றி காலமானார்.

மூத்த நடிகையான பைரவி வைத்யா, சோரி சோரி சுப்கே சுப்கே, நிமா டென்சோங்பா உட்பட  பல  படங்களில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.  பாலிவுட் திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள பைரவி வைத்யா  அக்டோபர்  8ம் தேதி காலமானதாக மும்பை திரைப்பட மற்றும் சின்னத்திரை சங்கம் அறிவித்துள்ளது.


பைரவி வைத்யா பாலிவுட் திரைப்படங்களில் பிரபல  நடிகையாக இருந்தாலும் பல குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், நட்சத்திரங்கள்,  உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!