பிரபல பேஷன் டிசைனருக்கு செக்ஸ் தொல்லை... இவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு தன்னை காதலிக்கும்படி மிரட்டியதாகவும், செல்போனில் தொடர்ந்து ஆபாசமாக பேசி செக்ஸ் தொல்லைக் கொடுத்து வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.பெங்களூரின் வயாலிகாவல் பகுதியில் வசிக்கும் அந்த பெண் திருமணமான நிலையில், இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவரிடம் தொழிலதிபரும், சென்னை இ.வி.பி. பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி அறிமுகமாகியுள்ளார்.
தனது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்கான ஆடைகளை வடிவமைக்கும்படி அவர் தொடர்புகொண்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்போது அவருடைய மகள் மூலமாக தொடர்பு வலுவடைந்து இருவரும் குடும்ப நண்பர்களாக பழக தொடங்கியுள்ளனர். பின்னர் தொழிலுக்காக முதலீடு செய்வதாக சந்தோஷ் ரெட்டி உறுதி அளித்ததாகவும், பலமுறை வீட்டிற்கு வந்து சென்றதாகவும் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நட்பின் பின்னர் தன்னை காதலிக்கும்படி சந்தோஷ் ரெட்டி அழுத்தம் கொடுத்ததாகவும், மறுத்தபோது தாக்கி மிரட்டியதாகவும் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “நான் காதலை ஏற்காவிட்டால் என்னையும், என் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிடுவேன்” என அச்சுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பெண் அளித்த புகாரின் பேரில் வயாலிகாவல் போலீசார் தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக சந்தோஷ் ரெட்டி தரப்பில் விளக்கம் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது வெளிப்படும் நிலை உள்ளது.?
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!