”ப்ரூக்ளின் 99” நடிகர் காலமானார்... சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்!!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் . இவர் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 61. இவரது திடீர் மறைவு பிரபலங்கள், சக நட்சத்திரங்கள் , ரசிகர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். ஆண்ட்ரே பெரும்பாலும் ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இவரது நடிப்பில் வெளியான ஹோமிசைடு லைப் ஆஃப் ஸ்ட்ரீட் , மென் ஆப் செர்டைன் ஏஜ், கேப்டன் ரைமண்ட் ஹால்ட் என தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
ஆன்ட்ரே தனது திரைப்பட வாழ்வில் 11 எம்மி விருதுகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் இவற்றுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டவர். சிறந்த குண சித்திர நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவரின் திடீர் மறைவுக்கு அவரது குடும்பத்தினர், திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!