20 வயதில் பிரபல தயாரிப்பாளரின் மகள் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
தயாரிப்பாளரின் மகள் திஷா குமார் செப்டம்பர் 6, 2003 அன்று கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங் தம்பதியருக்கு பிறந்தார். திஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பம் சினிமாவில் பிரபலமானது என்றாலும், திஷா திரைப்பட விழாக்கள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த திஷா குமார் நேற்று உயிரிழந்தார். அவரது அகால மரணம் குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "புற்றுநோய்க்கு எதிராக போராடிய அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இக்கட்டான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சனம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார். அவர் தனது மருமகன் பூஷன் குமாருடன் இணைந்து டி-சீரிஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இருவரும் இணைந்து லக்கி: நோ டைம் ஃபார் லவ், ரெடி, டார்லிங், ஏர்லிஃப்ட் மற்றும் சத்யமேவ் ஜெயதே உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ளனர். இருவரும் இணைந்து கார்த்திக் ஆர்யனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ஃபூல் பூலையா 2 படத்தையும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் 2022 இல் வெளியானது. இதில் கியாரா அத்வானி நடித்தார் மற்றும் ரூ. 250 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இது தவிர ரன்பீர் கபூரின் அனிமல் படத்தையும் கிரிஷன் மற்றும் பூஷன் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா