பிரபல யூடியூபர் வாசிம் அக்ரம் கைது... பாகிஸ்தான் உளவாளி... அதிர வைக்கும் தகவல்கள்!
ஹரியானாவில் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தில் வசித்து வருபவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற பெயரில் யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் “ பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அதன் தூதரகத்துக்கு 3 ஆண்டுகளாக உளவு பார்க்கும் வேலையை வாசிம் அக்ரம் செய்து வந்ததாக தெரிகிறது. அக்ரம் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் உரையாடல்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானின் மற்றொரு உளவாளியான தவுபிக்கை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் அக்ரம் குறித்த தகவல்களை கூறினார்.
அக்ரம் மற்றும் தவுபிக் இருவரும் இணைய அழைப்புகள் மூலம் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!