வைரல் வீடியோ... தோனியின் காலில் விழும் ரசிகை!!
கிரிக்கெட் உலகில் ‘தல’ ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.இந்த ஆண்டு அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தோனி 2024ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரிலும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து, அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
தோனி சமீபகாலமாக கிரிக்கெட்டுடன் சேர்த்து படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அத்துடன் தோனி, தனது ஓய்வு நேரத்தில் கார் மற்றும் பைக்கில் வலம் வருவதும், ஜிம்மில் ஒர்க்கவுட் செய்வதுமாக இருந்து வருகிறார். தோனி என்ன செய்தாலும் உடனே புகைப்படங்கள், வீடியோக்களாக அவரது ரசிகர்கள் வைரலாக்கி விடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தோனி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தோனி, தனது காலில் விழும் பெண் ரசிகையை தடுத்து நிறுத்தி அவருக்கு கை கொடுத்து, அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தல எப்பவும் கெத்து தான் போன்ற பல கமெண்ட்டுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!