சச்சின்.. “பிரச்சனைகளை மறந்துடுங்க... உடனே காப்பாத்துங்க...” காம்ப்ளியின் வீடியோவைப் பகிர்ந்து ட்விட்டரில் கதறும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், 52 வயதான வினோத் காம்ப்ளி நிற்கவும், நடக்கவும் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அந்த வழியே செல்லும் வழிப்போக்கர்கள் சிலர் அவர் இலக்கை அடைவதற்கு கைத்தாங்கலாக அவரை நடக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும், காம்ப்ளியால் நடக்க முடியவில்லை.
காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பது குறித்து கவலையடைந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரது நெருங்கிய நண்பரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரை உதவி செய்யுமாறு டேக் செய்து வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலான அந்த வீடியோவில், பார்வையாளர்கள் அவரது உதவிக்கு விரைவதற்குள் காம்ப்ளிலி தெருக்களில் நிற்பதற்கே தடுமாறிப் போராடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இயலவில்லை. அந்த வீடியோவில் இருப்பது காம்ப்ளி தானா என்பதையும் சரிபார்க்க இயலவில்லை.
கடந்த 10 வருடங்களாகவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி பல உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். கடந்த 2013ல் மும்பையில் கார் ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, அவருக்கு இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் காம்ப்ளியின் நண்பர் சச்சினை டேக் செய்து, அவருக்கு உதவுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா