undefined

  ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி ... பெரும் சோகம்! 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை வனப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள், அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளன. இங்கு உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் குறித்து மக்கள் ஏற்கனவே பலமுறை புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், மகாராஜா கடையை அடுத்த நாராயணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்ற விவசாயி நேற்று இரவு தன்னுடைய தோட்டத்துக்கு காவலுக்குச் சென்றபோது, அங்கு வந்த ஒற்றை காட்டு யானை அவரை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தோட்டத்திற்குச் சென்று தேடியபோது, அவரது உடலை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, “காட்டு யானை தாக்குதல் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” எனக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்தினர். வேணுகோபால் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காட்டு யானைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி விவசாயிகளை உயிரிழக்கச் செய்கின்றன என்பதால், அவற்றை வனத்துறையினர் உடனடியாக அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!