undefined

தேம்பி அழுத பவதாரணி.. தோளில் தட்டி கொடுத்து ஆறுதல் சொன்ன இசைஞானி..!

 

தேம்பி அழுத மகள் பவதாரணியை தோளில் தட்டி ஆறுதல் தெரிவித்த தந்தை இளையராஜா.. இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா வீட்டு இளவரசி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார் .அவர்  ஜனவரி 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே மனைவி ஜீவாவை இழந்து தனிமையில் தவித்து வந்த இளையராஜாவுக்கு பவதாரணி தான் ஆறுதலாக இருந்து வந்தார். தற்போது அவரின் மரணம்   ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று  விமானம் மூலம்  பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.  

<a href=https://youtube.com/embed/Zm2PkbTkdEI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Zm2PkbTkdEI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="பாடும் போது அழுத பவதாரணி தேற்றிய இளையராஜா வைரலாகும் பழைய வீடியோ | #ilayaraja #ibctamilshorts" width="695">

சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர்  பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இளையராஜவுக்கு சொந்தமான  லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் பவதாரணி பாடி கொண்டிருந்தார். அப்பொழுது கண் கலங்கியப் படியே பாடினார். அருகில் அமர்ந்திருந்த தந்தை இசைஞானி இளையராஜா தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க