undefined

காதல் திருமணம்... மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்! 

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 32 வயது ராமச்சந்திரன் பால் கறக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ராமச்சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் 49 வயது சந்திரனின் மகளான 21 வயது ஆர்த்தியும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்ததால் பெண்ணின் குடும்பம் காதல் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் ராமச்சந்திரனுக்கும், அவரது மாமனாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேற்று மாலை, ராமச்சந்திரன் பால் கறந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, சந்திரன் அவரை வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த நேரத்தில் சந்திரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை வெட்டி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தைப் பற்றிய தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?