undefined

புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்... பரபரப்பு...!!

 

சென்னையில்  திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக  புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயந்தி.  இவரை  அக்டோபர் 17ல்  கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைத்துள்ளனர்.  நேற்று காலை பெண் சிறை காவலர்கள் கனகலட்சுமி மற்றும் கோகிலா   இருவரும் சென்னை புழல்   சிறையில்  அடைக்கப்பட்ட பெண் கைதி ஜெயந்தியை பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்ய  அழைத்துச் சென்றனர்.

இதனை சிறைவளாகத்திற்கு  வெளிப்புறமாக வந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிகிறது. அப்போது அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த கைதி ஜெயந்தி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.  இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சிறைக்காவலர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
 உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த சிறைத்துறை காணிப்பாளர் பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தியனர்.அத்துடன் கைதி ஜெயந்தி தப்பிச் சென்றது  குறித்து   புகார் அளித்தார். இதன் பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கைதி ஜெயந்தியை  பிடிக்க   விசாரணை நடைபெற்று வருகிறது.  

இதில் தனிப்படை அமைத்து ஒருபிரிவினர் கர்நாடகாவிற்கும்  மற்றொரு பிரிவினர் புழல் சிறை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன்  பெண் கைதி தப்பிச் செல்ல காரணமான பெண் சிறை வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இச் சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!