அதிர்ச்சி வீடியோ... திருமண விழாவில் கோர தீவிபத்து.. 100 பேர் பலி, 150 பேர் படுகாயம்!!
ஈராக்கில் திருமண மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நையன்வே மாகாணத்தில் ஹமதன்யா பகுதியில் திருமண விருந்து நடைபெற்றது. இந்த திருமண விருந்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ மளமளவென பரவியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து மண்டபத்தை விட்டு வெளியேற முயற்சித்தனர்.
அதற்குள் தீ சுவற்றில் பற்றியது.அதில் சுவர் இடிந்து விழுந்தது. திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவர் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்ததே இதற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல் திருமண மண்டபத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஈராக்கில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எனவும் கூறப்படுகிறது.எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருந்ததால் எதிர்பாராமல் ஏற்பட்ட தீ மளமளவென பரவத் தொடங்கியது. இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் வரை உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...