ரயில்வே பணிமனையில் தீ விபத்து, 2 ஊழியர்கள் படுகாயம்! 

 

சென்னையில் பெரம்பூர் கேரேஜ் அருகே தெற்கு ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில்  ரயில் பெட்டி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை இங்கு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அந்த வகையில்  ரயில்வே ஊழியர்கள் டிங்கரிங் வேலை செய்த நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் பெயின்டிங் வேலை செய்தனர்.அப்போது, டிங்கரிங் செய்த பகுதியில் வைத்திருந்த தின்னர் மீது தீப்பொறி பட்டு திடீரென தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

இந்த திடீர் விபத்தால்  காமராசன், சுகனேசன் ஆகிய 2 ரயில்வே ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?