நாளை பீகாரில் முதல் கட்ட சட்டசபைத் தேர்தல் ...121 தொகுதிகளில் வாக்குப்பதிவு! 

 
 

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் மொத்தம் 7 கோடி 42 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடி 92 லட்சம் ஆண்கள், 3 கோடி 50 லட்சம் பெண்கள் ஆவர். தேர்தலை முன்னிட்டு மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது. 17-ஆம் தேதி மனுதாக்கலின் கடைசி நாள், 18-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை மற்றும் 20-ஆம் தேதி மனு வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் என நிர்ணயிக்கப்பட்டது. 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எனினும், பிரதான போட்டி பா.ஜனதா கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பல கூட்டங்களில் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான பிரசாரங்களும் தீவிரமாக நடந்தன.

முதல்கட்டத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக தேஜஸ்வி யாதவ் (ரகோபூர்), தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா), துணை முதல்–மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை), நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (அலிநகர்), ஆனந்த் சிங் (மொகமா) ஆகியோர் உள்ளனர். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!