மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை!
கனமழை மற்றும் கடல் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (அக். 21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 5.8 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள மேல் வளிமண்டலச் சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகும் என்றும், அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடல்சுற்றுப்பகுதிகளில் கடும் அலைகள் எழுவதற்கும், வானிலை மோசமாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலில் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும், மீனவ கிராம பஞ்சாயத்துகள் தங்களது பகுதிகளில் இதை அறிவிக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!