பல பெண்களுடன் உல்லாசம்.. கணவர் மீது மனைவி ஆதாரத்துடன் புகார்!
என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. பல பெண்களையும் காதல் வலைவீசி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வருகிறார் என்று மனைவி புகாரளித்திருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னரும் ஆறுமுகம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வருவது தெரிந்து சந்தியா தேவி கோபமடைந்து, இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோதும், ஆறுமுகம் அந்த பெண்கள் எல்லாம் என்னுடைய நண்பர்கள் என்று சமாளித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்றொரு பெண் ‘நானும் உங்கள் கணவரும் 10 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ எனத் சந்தியா தேவியைத் தொடர்பு கொண்டு, தனிப்பட்ட புகைப்படங்களையும் அனுப்பியதால் மனைவி சந்தியா தேவி அதிர்ச்சியில் உள்ளார். ஆயினும், கணவர் தனது திருமண நிலையை மறைத்து, பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், தனிமையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சந்தியா தேவி கோவை டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்து, ஆறுமுகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னும் அவரது குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!