undefined

குற்றாலத்தில் பெருவெள்ளம்... அருவி கரை சேதம்.. 5வது நாளாக அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு!

 

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கால் அருவி கரையின் பெரும் பகுதி சேதமடைந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் வெள்ளம் பல்வேறு நீரோடைகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் குற்றாலம் அருவி கரை சேதமடைந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் அதிகமாக அடைந்ததால் பாதுகாப்புக்காக இந்த தடை அமல் செய்யப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் காலை முதலே ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரில் இருந்து வந்தோர் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். நீர்வரத்து குறையும் பட்சத்தில் மட்டுமே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?