undefined

  தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  

 


 
தமிழக தொல்​லியல் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் நடன.​காசி​நாதன் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனை அடைந்​தேன். காசி​நாதன் பல்​வேறு கல்​வெட்​டுகள், செப்​புப் பட்​ட​யங்​கள், பழமை​யான சிற்​பங்​கள், நடு​கற்​களை கண்​டு​பிடித்த பெரு​மைக்​குரிய​வர். தமிழரின் தொன்​மையை நிலை ​நாட்ட பூம்​பு​கார் ஆழ்​கடலாய்வு உட்பட பல ஆய்​வு​களைச் செய்​தவர்.


தமிழகம் முழு​வதும் காசி​நாதன் வரலாற்​றுக் கருத்​தரங்​கு​களை​யும், கல்​வெட்​டுப் பயிற்சி வகுப்​பு​களை​யும் நடத்தியவர்.  கல்​லெழுத்​துக் கலை, சோழர் செப்​பேடு​கள், தமிழர் காசு இயல், ராச​ராசேச்​சுரம் உட்பட பல்வேறு நூல்​களை எழு​தி​யதுடன், பல நூல்​களை பதிப்​பித்​து, தொல்லியல் துறைக்கு பெரும் பங்​களிப்பை ஆற்றி​யுள்​ளார்.

இவரது அளப்​பரிய பங்​களிப்​பு​களுக்கு அங்​கீ​கார​மாக, தமிழக அரசின் உ.வே.​சா. விருது, சிறந்த நூல் விருது உட்பட பல விருதுகளை பெற்​றார். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தார், அறிஞர்​கள், மாணவர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?