மர்மமாக உயிரிழந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் !
நாகை மாவட்டம் செல்லூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை காலை சாலையோரத்தில் தலையில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வழக்கரை பிரதான சாலையைச் சேர்ந்த ராஜாராமன் (38) என அடையாளம் காணப்பட்டார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர். 2024ஆம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் விசாரணைக்காக நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராகியிருந்தது தெரியவந்தது.
ராஜாராமன் விபத்தில் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்தின் மர்மம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மனைவி மனோசித்ரா மற்றும் எட்டு வயது மகன் தஸ்வின் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!