undefined

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குத்திக் கொலை!

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒரு வீட்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரின் ஃபார் ராக்வே சுற்றுப்புறத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் தனது குடும்ப உறுப்பினர்களை தாக்கி கொல்வதாக போலீசாருக்கு 911ல் அவசர அழைப்பு கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு போலீசார், தீ வைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட வீட்டை போலீஸ் அதிகாரிகள் சோதனையிட உள்ளே சென்ற போது, ஆண் ஒருவர் பொருள்களுடன் வெளியேறுவதை பார்த்துள்ளனர்.

உடனே அவரை தடுத்து பேச முயன்ற போது, அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் 2 போலீஸ் அதிகாரிகளையும் குத்தியுள்ளார். இதனால் 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுக் வீழ்த்தியுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு விரைந்து வந்து வீட்டிற்குள் இருந்து 12 வயது சிறுவன், 44 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் ஆகிய 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் வாசலில் காயங்களுடன் நின்ற 11 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியவர் 39 வயதான கோர்ட்னி கார்டன் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!