undefined

காந்தாரா ட்ரைலர்... சிவகார்த்திகேயன் வெளியீடு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 

 


 
கன்னட திரையுலகில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று ‘காந்தாரா’.இந்தப் படத்தின் தொடராக உருவாகியுள்ள ‘காந்தாரா – சாப்டர் 1’  படத்தின்  டிரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது.  இப்படத்தின் டிரெய்லரை தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இவருடன்   நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


‘காந்தாரா’ திரைப்படம்  இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவான ‘காந்தாரா – சாப்டர் 1’ படம், அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்திற்கு  அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளது.  ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள   இந்தப் படத்தை உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியிடும் திட்டம் படக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இந்த ட்ரைலர் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?