undefined

அதிர்ச்சி... கஞ்சா போதையில் தண்டவாளத்தில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்!

 

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதயில் இரண்டு மாணவர்கள் தண்டவாளத்தில் கட்டிபிடித்து உருண்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.

அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறினர். போதையில் மாணவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உருண்டு பிரண்ட சம்பவத்தால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதில் ஒரு மாணவர் அங்கு செல்லவிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று படுத்துக்கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்தனர். நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை கண்டித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவதால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!