அட... அன்னப்போஸ்ட்டில் தங்கப்பதக்கம் பெற்ற தடகளவீரர் .. மாஸ் வீடியோ..!!
தேர்தலில் ஒருவர் தவிர அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் வாங்கி விட்டால் மீதமிருக்கும் ஒருவர் தேர்தலில் கலந்து கொள்ளாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விடுவார். இதற்கு அன்னபோஸ்ட் என்பர். அதே போல் இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் அன்னபோஸ்ட்டில் ஒருவருக்கு தங்கம் வழங்கப்பட்டது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
போட்டி தொடங்கியதும் ஒருவர் மட்டுமே மைதானத்தில் ஓடினார். அவர் எல்லைக் கோட்டை தொட்டதும் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மாநில அளவிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற இறுதி போட்டிக்கு அவர்களில் 7பேர் வரவில்லை. மாநில அளவிலான முக்கியமான போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கிடந்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.
கடைசியில் லலித் குமார் என்ற ஒரு வீரர் மட்டுமே ஊக்க மருந்து பரிசோதனையில் கலந்து கொண்டு நிரூபித்து போட்டியில் பங்கேற்று, அவர் மட்டுமே ஓடி சென்று தங்கப்பதக்கத்தையும் வென்றார். இது குறித்து லலித்குமார் “இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...