தங்கம் விலை மீண்டும் சரிவு... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 குறைவு!
கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காண்ந்த தங்க விலை இன்று திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்த தங்கம், இன்று ரூ.1,800 வரை சரிவடைந்தது.
தமிழகத்தில் நேற்று (அக்.29) காலை தங்கம் கிராமுக்கு ரூ.11,325 என விற்பனையாக, சவரனுக்கு ரூ.90,600 என விலை உயர்ந்தது. ஆனால் இன்று (அக்.30) தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலைவும் சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.1 குறைந்து ரூ.165க்கு விற்பனையாகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச தங்க விலை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஏற்றத்தாழ்வுகளால் உள்ளூர் சந்தையிலும் விலை மாறுபாடு தொடர்கிறது. நவம்பர் மாதத்தை முன்னிட்டு திருமண பருவம் தொடங்க உள்ள நிலையில், தங்க விலை மேலும் குறையுமா என்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!