undefined

பண்டிகை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது!

 

இன்று விஜயதசமி பண்டிகை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது இல்லத்தரசிகளிடையே கொஞ்சம் நிம்மதியை கொண்டு வந்துள்ளது. 
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை புதிய உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெட் வேகத்தில் உயர துவங்கியது. அந்த வகையில் நேற்று காலையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்தும், பின் ஒரே நாளில் இருமுறையாக மாலையில் ரூ.480 அதிகரித்து புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?