தீபாவளி தினத்தில் தங்கம் விலை சரிவு... நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
தீபாவளி தினத்தில் தங்கம் விலை சரிவு கண்டதால் நகை பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை காரணமாக மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை விலை நிலவரப்படி தங்க விலை மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன்படி, பவுனுக்கு ரூ.640 குறைந்து தற்போது ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.95,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.11,920 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளில் பெரும்பாலானோர் தங்க நகைகள் வாங்க முன்வரும் நிலையில், இன்றைய விலை சரிவு வாடிக்கையாளர்களுக்கு இனிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தங்க சந்தையில் மீண்டும் வாங்குதல்கள் கூடும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!