தங்கம் விலை அதிரடி சரிவு... சவரன் ரூ.89,000க்கு கீழ் விற்பனை!
கடந்த சில வாரங்களாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று திடீரென சரிந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்த நிலையில், இன்று அதே அளவுக்கு விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று (அக்.29) காலை தங்கம் கிராமுக்கு ரூ.11,325 என விற்பனையாகி, சவரனுக்கு ரூ.90,600 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால் இன்று (அக்.30) தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,100 ஆகவும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்து, கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.165-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ரூ.9,000 வரை சரிந்த நிலையில், திருமண பருவம் நெருங்கி வருவதால், விலை மேலும் குறையுமா என நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!