undefined

மாலையில் அதிரடி காட்டிய தங்கம் விலை... ஜெட் வேகத்தில் எகிறியது!

 

தங்கம் விலை இன்று காலை திடீரென குறைந்த நிலையில், மாலை நேரத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது. அதன் பேரில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.88,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,100 என்ற அளவில் இருந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரமாக விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் மாலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை மீண்டும் பாய்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்வுடன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.11,300 என்ற அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தங்க விலை மீண்டும் உயர்ந்தது, பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?