தங்கம் விலை மீண்டும் உயர்வு... வெள்ளி வரலாறு காணாத உச்சம்!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செப்டம்பர் 25ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளநிலையில், வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!