undefined

 அதிர்ச்சி... மனைவியை பாடம் நடத்த அனுப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர்!! பெற்றோர் முற்றுகை போராட்டம்!!

 

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பொதுவாக கடமைக்கு பணிபுரிந்து வருவதாக பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது. அதனால் தான் பெற்றோர்கள் பலரும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு பதிலாக தனதுமனைவியை பள்ளிக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சன்னகிரி தாலுகா மாதேனஹள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. எச்.எஸ்.பிரகாஷ் இந்த பள்ளியில்   ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இங்கு 2 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்து வரும் பிரகாஷ், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் தான் பள்ளிக்கு சென்றுவந்தார்.  

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி, பிரகாஷ் தனது மனைவியை, தனக்கு பதிலாக பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பியிருந்தார். இவரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர்கள்   பள்ளியில்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து  கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை