undefined

பெரும் ஷாக்.. கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு!

 

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் 283 யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 6 யானைகள் வேட்டையாடப்பட்டு பலியாகியுள்ளன.  நாட்டிலேயே அதிக யானைகள் உள்ள மாநிலம் கர்நாடகா. கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 6 ஆயிரத்து 395 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகரிப்பது போல், உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 283 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  கடந்த 2021-22ல் 82 யானைகளும், 2022-23ல் 72 யானைகளும், 2023-24ல் 94 யானைகளும், 2024-25ல் (ஜூலை வரை) 35 யானைகளும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பெரும்பாலான யானைகள் வயது முதிர்வு காரணமாகவும், உடல் தளர்ச்சி காரணமாகவும் இறந்தன. இது தவிர யானைகள் இறப்பிற்கு மின்சாரம் தாக்கியதே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 17 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 6 யானைகள் வேட்டையாடப்பட்டு பலியாகியுள்ளன. வனத்துறையினர் தனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படுவது தெரியவந்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!