ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்.. வரி விகிதம் குறைப்பு, விற்பனை சாதனை... நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கலால் வரி, வாட், சேவை வரி உள்ளிட்ட பல மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளை கொண்டிருந்தது. இப்போது மத்திய அரசு அந்த நான்கு அடுக்குகளை இரண்டு மட்டமாக குறைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய சீர்திருத்தத்தின் படி, ஜி.எஸ்.டி. தற்போது 5% மற்றும் 18% என இரு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார்கள், குளிர்பானங்கள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து டெல்லியில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். பியூஷ் கோயல் கூறுகையில், “ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் உள்நாட்டு கார் விற்பனை பெரிதும் உயர்ந்துள்ளது — 8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள், 50% மகேந்திரா கார்கள், 50 ஆயிரம் டாடா கார்கள் விற்றுள்ளன” என்றார். அஸ்விணி வைஷ்ணவ், “இந்த சீர்திருத்தம் உணவு பணவீக்கத்தை குறைத்து, எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையில் சாதனை படைத்துள்ளது” என்றார். நிர்மலா சீதாராமன், “ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளது; கார், ஏ.சி., வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்களின் விற்பனை பெருகி, தற்சார்பு இந்தியா வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!