undefined

மிலாடி நபி வாழ்த்துக்கள்... அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக இருப்போம்!!

 

இஸ்லாமிய சகோதர்களின் புனித விழாக்களில் ஒன்று மிலாடி நபி.  உலகம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இஸ்லாமியர்களால்  ஒவ்வொரு ஆண்டும்  வெகு விமரிசையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இறை தூதர் முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி 570ல் ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் 3 வது   மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார்.  இவரது பிறந்த நாளும், நினைவு நாளும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்நாளில் முகம்மது நபியின் போதனைகள் அடங்கிய  குரானை வாசிப்பதை  மிக முக்கிய கடமையாக கொண்டுள்ளனர்.  மேலும் பெரும்பாலானவர்கள் இந்நாளில்  நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில்   ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவர்.   மேலும்   இறை தூதரான முகம்மது நபியை நினைத்து சிறப்பு தொழுகை நடத்துவார்கள்.  நண்பர்கள், உறவினர்களை அழைத்து பரிசுகள் வழங்கி, ஒருவர் மற்றவரின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்.  புத்தாடை உடுத்தி, சிறப்பு தொழுகை, வாழ்த்துக்கள் பரிமாறுதல் என  கொண்டாட்டத்துடன் மிலாடி நபியை வரவேற்பர்.  


பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறையின்  அடிப்படையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில்  மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலையே தென்படுவதால்  செப்டம்பர் 28 ம் தேதி அன்று மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் 28 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்த நாளையே அரசு விடுமுறையாகவும் அறிவித்துள்ளனர்.   இந்நாளில்  முகம்மது நபியின் போதனைகளை பின்பற்றி அனைவரும் அல்லாஹ்வின் அன்பிற்கு உரியவர்களாக இருக்க வேண்டும் என்பதே மிலாடி நபி கொண்டாடப்படுவதன் நோக்கம் .  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!