பெங்களூருவில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்... பெற்ற தாயையே 4-வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற மகன்!  

 

பெங்களூரு ராஜராஜேஸ்வரி (RR) நகரில் உள்ள பி.இ.எம்.எல் லேஅவுட் பகுதியில், 75 வயதான முதியவர் சாவித்திரம்மா என்பவரை அவரது மகன் வெங்கடேஷே 4-வது மாடியில் இருந்து தள்ளிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற தாயை மகனே இந்த நிலைக்கு ஆளாக்கியது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

கடந்த 5 ஆண்டுகளாகச் சாவித்திரம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். நேற்று (ஏப்ரல் 15) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ், தனது தாயைத் தூக்கிக்கொண்டு 4-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே தள்ளியுள்ளார். பலத்த காயமடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், முதியவர் கீழே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. "தன் தந்தை மறைந்த பிறகு தாயைப் பல ஆண்டுகளாக நல்லபடியாகக் கவனித்து வந்ததாகவும், ஆனால் தொடர் உடல்நலக் குறைவால் அவர் படும் அவதியைப் பார்க்க முடியாமலும், பராமரிக்க முடியாமல் ஏற்பட்ட விரக்தியாலும், பொருளாதார நெருக்கடியாலும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக" அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும், பெத்த தாயையே ஒரு மகன் கொலை செய்த இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை