சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து “மோந்தா” புயலாக வலுப்பெற்றது. தற்போது காக்கிநாடாவிலிருந்து 270 கிலோமீட்டர் தென்கிழக்கில் நிலைகொண்டுள்ள இது, மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இன்று மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் கடுமையாக கொந்தளிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!