undefined

கேரளத்தில் கனமழை: சுற்றுலா மையங்கள் மூடல்.. இரவு பயணங்களுக்கு தடை!

 

 கேரளத்தில் கனமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று மலப்புரம் முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி, ஒடிசாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வரும் ஜூலை 19ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தீவிரமான மழை பெய்து வருகிறது.


தொடர் மழை காரணமாக கேரளத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, இடுக்கி, ஆலப்புழா, திருச்சூர், கண்ணூர் மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட கட்டுப்பாடுகளும், பல நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் சாகச பூங்காக்கள் மற்றும் மலையேற்றம் செல்ல தடை விதித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டயத்தில் இளவீழபூஞ்சிரா, இல்லிக்கால் கல்லு, மர்மலா நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் இரவுப் பயணம் செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!