undefined

அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை...!!

 

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள்  நவம்பர் 3ம் தேதி  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 4ம் தேதி  தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்  மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி  சென்னை, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர் , அரியலூர்,  கன்னியாகுமரி  என  14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!