திரிபுராவில் கனமழை.. நிலச்சரிவு.. 22 பேர் உயிரிழப்பு: 65,400 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!
இந்தியாவில் திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். திரிபுராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையினால் வீடுகள் சேதமடைந்ததால், மாநிலத்தில் உள்ள 450 நிவாரண முகாம்களில் 65,400 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.சாந்திர்பஜாரில் உள்ள அஸ்வனி திரிபுரா பாரா மற்றும் தேபிபூர் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 10 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என்று முதல்வர் மாணிக் சாஹா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது'' என்றார்.
முன்னதாக, வடகிழக்கு மாநிலத்தில் பெய்த கனமழையால் 12 பேர் உயிரிழந்ததாக வருவாய்த் துறை செயலாளர் பிரிஜேஷ் பாண்டே தெரிவித்திருந்தார்.
“இதுவரை, 12 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காணவில்லை. வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு, பௌதீக உள்கட்டமைப்பு மற்றும் விவசாய பயிர்களுக்கு விரிவான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கள மதிப்பீடு நடத்தப்பட்ட பிறகே உண்மையான புள்ளிவிவரங்கள் தெரியவரும்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!