தமிழகத்தில் இரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
நேற்று (24-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடையிடையே மிதமான மழை மற்றும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையம் இதை எச்சரித்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!