undefined

இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்படி, தற்போது தென்கிழக்கு வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திரா – வடதமிழக கடல்பகுதிகளில் காற்றழுத்த வேறுபாடு நிலவி வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று காலை 7 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?