பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து இளம்பெண் கட்டாய மதமாற்றம்... அதிர வைக்கும் உண்மைகள்!
பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் மிர்புகாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து இளம்பெண் சுனிதா குமாரி, மூன்று மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. அவரை கடத்தியவர்கள், ஒரு வயதான நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுனிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சுனிதா உமர்கோட் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி இந்து அமைப்புகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உமர்கோட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கில் சுனிதாவின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் சந்தர் கோலி ஆஜராகி வாதாடினார். விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றம், சுனிதா குமாரியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சுனிதா, சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் சந்தர் கோலி தெரிவித்ததாவது: “இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. பாகிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்படுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. பல வழக்குகளில் கடத்தல்காரர்கள் போலியான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து பெண்கள் விருப்பத்துடன் மதம் மாறியதாகச் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதால், நீதிக்காக போராட முடியாமல் போகின்றனர்,” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!