சட்டசபை தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை ... பல்கலைக்கழகம் அதிரடி!
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 24-ம் தேதி விடுமுறை அளிக்குமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறையாகக் கிடைக்கும். விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை உத்தரவைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றும் தவறினால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஈடாக மற்றொரு நாளில் வேலை நாளாகச் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!