undefined

பச்சை நிற சல்வாரில் கலக்கல் ஹோம்லி லுக்.. இன்ஸ்டாவில் தீயாய் பரவும் நடிகை வாணி போஜன் க்ளிக்ஸ்!

 

தனது அழகாலும் நடிப்பாலும் சின்னத்திரையை வசீகரித்த நடிகை வாணி போஜன், பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அவரது ஆரம்பகால படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், அசோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் திரையுலகில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்னர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். வாணி போஜனின் படங்கள் பெரியளவில் போல் ஹிட் ஆகவில்லை என்றாலும் ஓரளவு கவனிக்கப்படுகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு, பரத், விக்ரம், விதார்த் மற்றும் விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ்த் திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் கவனிக்கப்பட்ட நடிகையானார் வாணி போஜன். அந்த வகையில் சமீபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வாணி போஜன் நடித்த அஞ்சாமை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் நீட் தேர்வு குறித்த தனது கருத்தை இயக்குநர் கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார். மாடர்ன் லுக்கிலும், ஹோம்லி லுக்கிலும் மட்டுமின்றி, சிறந்த கதைக்களத்திலும் நடித்து வரும் வாணி போஜன், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். வாணி போஜன் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் பச்சை நிற சல்வாரில் இருக்கும் புகைப்படங்கள் போஸ்ட் செய்துள்ளார், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!