கொடூரம்... மனைவியை கட்டிப்போட்டு, பெல்ட்டை கழற்றி.. பகீர் கிளப்பும் வீடியோ!
பதைபதைக்க வைக்கும் சம்பவமாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆந்திராவில் ஒருவர் தனது மனைவியை கயிற்றால் கட்டி, நிற்க வைத்து பெல்டால் அடித்து கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பதைபதைத்து போய் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில்அவர் மனைவியை கயிற்றால் கட்டி நிற்க வைத்து, பெல்ட்டை கழற்றி அடித்துள்ளார். இதனால் வலி பொறுக்காமல், குருநாதத்தின் மனைவி அலறி துடித்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னவென்று பார்க்க ஓடி வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், மனைவியின் இரு கைகளையும் கயிற்றால் கட்டி, பெல்ட்டால் அடித்தும், கால்களால் உதைத்தும் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளன. அவரை அண்டை வீட்டுக்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அப்போதும் விடாமல் அவர் தாக்குதலில் ஈடுபட்டார். செலவுக்கு பணம் தரும்படி கேட்டபோது, இப்போது பணம் இல்லை என கூறிய ஆத்திரத்தில் அவர் மனைவியை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!