விடுதி வார்டன் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய உதயநிதி!!

 

தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ராயக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதிக்கு சென்று நேரடி கள ஆய்வு செய்தார்.  மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், விடுதியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


பின்னர் காட்டிநாயனப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மின்சார வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு வழங்கும் சலுகைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.  


அப்போது, கோப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  விடுதி காப்பாளர் முருகனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அரசுத்துறை சேவைகளை மேம்படுத்த திடீர் ஆய்வுகள் கைகொடுப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!