undefined

தளபதி கடைசி படம்.. நான் டைரக்ட் பண்ண ரெடி.. கெளதம் வாசுதேவ் மேனன் நச் பதில்!

 

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்து விட்டு விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

ஏற்கனவே முழு நேர அரசியலில் தனது பயணத்தை தொடங்கிவிட்ட விஜய், கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் ஏப்ரல் மாதம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், அவர் சினிமாவை விட்டு விலகியிருப்பது திரையுலகினர் மற்றும் திரையுலக ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 'GOAT' படத்திற்கு பிறகு அவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தை யார் இயக்குவது என்ற தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே உள்ளது. விஜய்யின் கடைசி படத்தை இயக்குவீர்களா என்று நேற்று நடந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ பட விழாவில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு வேகமாக பதில் அளித்த மேனன், அந்த வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்றார். நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் பிரமுகர் ஒருவர் அவதூறாக கருத்து கூறியது குறித்து கேட்டதற்கு, “பெண்களை பற்றி யார் அவதூறாக பேசியிருந்தாலும் அது தவறு. மேலும், “சிம்புவும், தயாரிப்புக் குழுவும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இணைந்தால், கண்டிப்பாக ‘வெந்து தனிதான் காடு 2’ படத்தைத் தயாரிப்பேன்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!