கடனை அடைப்பாரா தெரியலை... கெளதம் மேனன் மேல ரூ.60 கோடிக்கு புகார்!

 

நடிகர், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது தயாரிப்பாளர்கள் பெடரேஷனில் ரூ.60 கோடிக்கு புகார் இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் படவிழாவில் பேசியது திரையுலகினரை அதிர செய்துள்ளது. இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்’ படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகவே ஆகாதா என்கிற பதைபதைப்பும், ஏமாற்றமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

விக்ரம் நடிப்பில் மிகவும் நீண்ட.... நாட்களாக தயாரிப்பில் இருந்த 'துருவ நட்சத்திரம்'  நவம்பர் 24ம் தேதி வெளியாக இருந்த நிலையில், நடிகர் சிம்புவின் ‘சூப்பர் ஸ்டார்’ படத்தை இயக்குவதற்காக, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வாங்கிய பணத்தைத் திருப்பி அளிக்கக்கோரி, ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து இந்தப் பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டு படத்தை வெளியிடுகிறோம் என சொல்லி இருந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் ராஜன், ‘எமகாதகன்’ பட விழாவில் பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, “இன்று படம் உருவாவதில் இருந்து திரையரங்குகளில் வெளியிடுவது வரை பல பிரச்சினைகளை ஒரு படைப்பாளி சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’. கெளதம் எவ்வளவு பெரிய இயக்குநர், விக்ரம் எவ்வளவு பெரிய நடிகர்! ஆனாலும், இந்த நிலைமை. இதற்கு முன்னால், அவர் எடுத்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படமும் 30 கோடி ரூபாய் பிரச்சினையில் சிக்கியது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சம்பந்தமே இல்லாமல் ஏமாந்து போய் அவருக்குக் கொடுத்தார்.

ஃபைனான்ஸ் முடிந்து அந்தப் படம் வெளியாகிவிட்டது. ஆனால், ஐசரி கணேஷூக்கு இன்னும் 25 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. இன்றைய தேதி வரைக்கும் கொடுக்கவில்லை. பாவம், கெளதம் மேனனை நான் குறை சொல்லவில்லை. நிறைய கடன் வைத்திருக்கிறார். இன்று கூட ஃபெடரேஷனில் அவர் பேரில் 60 கோடி ரூபாய்க்கு புகார் உள்ளது. ஆனால், இப்போது படங்களில் 2 கோடி, 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறார். அப்போதாவது அவர் கடனை அடைப்பாரா எனத் தெரியவில்லை” என்றார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!