undefined

மாணவர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை!

 
மதுரையில் பள்ளி மாணவர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக இந்த கடத்தல் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா, குஜராத் மாநிலத்திற்கு தப்பி சென்ற நிலையில், அங்கு தனியார் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமியின் கணவர்  சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தனது 14 வயது மகனுடன் வசிக்கிறார். தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு அவரது மகன் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் ஆட்டோவில் சென்ற போது, கும்பல் ஒன்று காரில் கடத்தியது. பிறகு ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் மைதிலியிடம் பேசிய அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர், ரூ.2 கோடி கொடுத்தால்  மகனை உயிருடன் விடுவோம் என,மிரட்டினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த எஸ்எஸ். காலனி காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை யினர்  கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின்  செல்போன் டவர் மூலம் மாணவர் இருக்கும் இடத்தை  நெருங்கி, மாணவர், ஆட்டோ ஓட்டுநரை செக்கா னூரணி அருகே மீட்டனர். தப்பியோடிய கும்பலை தேடினர்.  

இந்நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த தேனி செந்தில் குமார் (45), (பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்)  அவரது கூட்டாளிகள்  தென்காசி வீரமணி ( 30) காளிராஜ் (36), நெல்லை அப்துல் காதர் (38)  ஆகிய 4 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.

4 பேரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பணம் மற்றும் சொத்து பிரச்னையில் மாணவர் கடத்தலுக்கு மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும்  அவரது நண்பர் தூத்துக்குடி மகாராஜன்  ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்தது.  போலீஸ் பிடியில் சிக்காமல் அவர்கள் வெளிமாநிலத்திற்கு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படையினர்  தொடர்ந்து தேடினர். இதற்கிடையில் குஜராத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தபோது, சூர்யா தற்கொலை செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, ‘ சூர்யா குஜராத்தில் அவர் தங்கிய விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அவரது தாயாரும் மகளின் தற்கொலை பற்றி உறுதி செய்வதற்கு காவல் நிலையத்திற்கு நேற்று வந்திருந்தார். கணவரை பிரிந்த நிலையில், பெற்றோருக்கு எதிராக இருந்த போதிலும், கடத்தல் வழக்கில் சிக்கிய விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். இருப்பினும்,  அவரது தற்கொலைத் தகவலை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளோம்’  என்றனர்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!