போதைப்பொருள் கப்பல் அமெரிக்கா வந்திருந்தால் 25000 பேர் உயிரிழந்திருக்க கூடும்... ட்ரம்ப் ஓபன் டாக்!
கரீபியன் தீவு பகுதியில் இருந்து அமெரிக்காவை நோக்கி பெண்டானைல் உள்ளிட்ட உயர்தர போதைப்பொருள்களை கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டுவீசி தகர்த்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “கரீபியன் பகுதியில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்த அதிநவீன நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக குண்டுவீசி அழித்தது. இது எனக்கு பெரும் பெருமை அளிக்கிறது. கப்பலில் உயர்தர போதைப்பொருளான பெண்டானைல் கடத்தப்பட்டிருந்தது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது,” என கூறியுள்ளார்.
மேலும், “இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்; 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஈகுவடார் மற்றும் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த கப்பல் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தால், 25 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!